இண்டியன்வெல்ஸ் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய அல்காரஸ், மெத்வதேவ்

வாஷிங்டன்,

இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-1, 7-6 (7-2) என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்சல்சனை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Source link