அசாம்: ஜவஹர்லால் நேரு சிலை உடைப்பு – போலீசார் விசாரணை

கவுகாத்தி,

மறைந்த முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் தலைவருமானவர் ஜவஹர்லால் நேரு. இவருக்கு அசாம் மாநிலம் கசார் மாவட்டம் பைலபுல் பகுதியில் சந்தை உள்ளது. இந்த சந்தை பகுதியில் ஜவஹர்லால் நேருவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு சிலையை திங்கட்கிழமை இரவு மர்ம நபர்கள் புல்டோசர் கொண்டு உடைத்துள்ளனர்.

சிலை உடைக்கப்பட்டது குறித்து நேற்று காலை தெரியவந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி, ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும், சிலையை உடைக்க பயன்படுத்தப்பட்ட புல்டோசரையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவான புல்டோசர் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டசபைக்கு மார்ச்-ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link