ஆக்லாந்து,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையே நேற்று 3-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே தடுமாறினர்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன், சாண்ட்னர், சியர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் நியூசிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். டாம் லாதம் அரைசதமடித்து அசத்தினார். அவர் 63 ரன்களும் , கான்வே 39 ரன்களும் எடுத்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் தோல்வி குறித்து தென்ஆப்பிரிக்க கேப்டன் கேஷவ் மகராஜ் கூறுகையில்,
‘தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து விட்டோம். 46 ரன்னுக்கு 5 விக்கெட் என்ற சரிவில் இருந்து மீள்வது கடினமாக இருந்தது. பேட்டிங் கில் முதல் 10 ஓவர்களில் ஆடிய விதம் பின்தங்க வைத்து விட்டது. அதே போல் சூழலுக்கு தக்கபடி போதுமான அளவு மாறவில்லை. இது அனுப வம் இல்லாத அணி. ஆனால் தோல்விக்கு அதை சாக்குபோக்காக சொல்லவில்லை. இதில் இருந்து விரைவில் பாடம் கற்றுக்கொள்ள விரும் புகிறோம். இந்த தொடரின் சிறப்பு என்னவென்றால் சரிவில் இருந்து மீள் வதற்கு இன்னும் எங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. அடுத்த ஆட்டத்தில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் துல்லியமாக செயல்பட வேண்டியது முக்கியம்’ என்றார்.
