அண்ணே அப்படி பேசாதீங்க..எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு பிரேமலதா கொடுத்த ரியாக்‌ஷன்! – premalatha vijayakanth says edappadi palaniswami speaks like a third-tier orator.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு மூன்றாம் கட்ட பேச்சாளர் மாதிரி பேசுவது எனக்கு வருத்தமளிக்கிறது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறு இன்னும் ஒன்பது நாட்களில் உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணியல் முதன்முறையாக தேமுதிக இணைந்துள்ளது.மேலும் திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் வரை தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சூறாவளி பிராச்சாரத்தில் பிரேமலதா

இந்த நிலையில் சேலத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். திமுக கூட்டணிக்கு பிரம்மாண்ட வரவேற்பு உள்ளது. பொதுமக்களில் ஆதரவு அமோகமாக இருக்கிறது. தேர்தல் அறிக்கை தான் சூப்பர் ஸ்டார் வெற்றியை பெற்று தரும். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சி அமைக்கும். மாமியார் உடைத்தால் மண் குடம்.. மருமகள் உடைத்தால் பொன் குடம்.. என்று பழமொழிக்கு ஏற்ப அரசியல் களத்தில் திமுக அடுத்த முறை ஆட்சி அமைக்காது என்று அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மீண்டும் ஆட்சி அமைக்கப்படும் என்று கூறினார்.

திமுக 10 முறை வென்ற தொகுதி…இந்த முறை யாருக்கு?

எடப்பாடி பேச்சு வருத்தம் அளிக்கிறது..

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி உள்ளிட்டோர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவது குறித்து கேள்விக்கு? எடப்பாடி பழனிசாமி ஒரு முதல்வர் வேட்பாளர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன புரட்சிகரமான மற்றும் கொண்டு வருவேன் என்று பொதுமக்களிடம் பேச வேண்டும் ஒரு மூன்றாம் பட்டு பேச்சாளர் மாதிரி அவர் பேசுவது எனக்கு வருத்தம் அளிக்கிறது அண்ணன் அப்படி பேசாதீர்கள் அரசியல் மாண்போடு கண்ணியத்தோடு பேசுங்கள் என்று ஒவ்வொரு செய்தியாளர்கள் சந்திப்பு நான் கூறி வருகிறேன்.

திருமாவளன் கேள்விக்கு திரென்று கொடுத்த ரியாக்‌ஷன்

இதனைத் தொடர்ந்து திருமாவளவன் உங்கள் பெயரை உச்சரித்த போது நீங்கள் எழுந்திருக்காமல் இருப்பது தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது.இது குறித்த கேள்விக்கு? திருமாவளவனுக்கும் எங்களுக்கும் நட்பு மிகப்பெரியது மக்கள் நல கூட்டணியில் இருக்கும்போது விஜயகாந்த் அவரிடம் சகோதரராக பழகினார் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நடந்தது சாதாரணமான விஷயம் இதை எதிர்க்கட்சியினர் பெரிது படுத்துகிறார்கள் என்று திருமாவளவனே விளக்கம் அளித்துள்ளார். இதனை சமூக ஊடகங்களும் செய்திகளும் தான் பெரிதாக பரப்புகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் அதிகாரிகள் மாற்றுவதில் அரசியலா?

தமிழகத்தில் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டு வருவது குறித்த கேள்விக்கு? தேர்தல் நடைபெறும் பொழுது எல்லாம் காவல்துறை அதிகாரிகள் மாற்றுவது இயல்பு. ஆனால் இந்த முறை இதுவரை இல்லாத அளவிற்கு எல்லா அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளன அது ஏன் என்று தெரியவில்லை நிச்சயமாக இதற்குப் பின்னால் அரசியல் இருக்கும் என்று தோன்றுகிறது சூழ்ச்சி இருக்கிறது இவை அனைத்திற்கும் முடிவு மே நான்காம் தேதி தெரியும் என்று கூறினார்.

விருதாச்சலம், மயிலம் உள்ளிட்ட தொகுதிகளில் வன்னியர்கள் அதிகம் உள்ளனர். வன்னியர்களின் இட ஒதுக்கீடு குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன என்று குறித்த கேள்விக்கு? நான் ஏற்கனவே இதற்கு பலமுறை பதில் அளித்திருக்கிறேன்.2026 க்கான சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரட்டும் மே நான்காம் தேதி ஆட்சி அமைக்க போவது உறுதி. அண்ணன் முதல்வர் ஸ்டாலின் ஏழாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி. இது குறித்த நிலைப்பாட்டை அவரிடம் எடுத்துக் கூறி நல்ல முடிவை எடுப்போம் என்று கூறினார்.