அதிமுகவின் முழு வேட்பாளர் பட்டியல்.. 145 வேட்பாளர்கள் விவரம் இன்று வெளியீடு? எடப்பாடி வியூகம்! – aiadmk’s complete list of candidates is likely to be released today

அதிமுகவின் முழு வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவின் முழு வேட்பாளர் பட்டியல்(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாட்டை ஆளப்போவது யார் என்பது தீர்மானிக்கும் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது .இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான திமுக இதுவரை நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இல்லாத அளவிற்கு மெகா கூட்டணியை அமைத்து களமிறங்கியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் பலம் மிக்கதாகவே உள்ளது. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நிறைவடைந்து விட்டது. அதாவது பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவிற்கு 11 தொகுதிகளும், தமாகாவிற்கு 5 தொகுதிகளும், இந்திய ஜனநாயக கட்சி 2 தொகுதிகளும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் புரட்சி பாரதம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு 65 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 169 தொகுதிகளில் அதிமுக தனித்து களமிறங்க உள்ளது.

நெருக்கடியில் திமுக! கூட்டணி என்னாகும்?

அதிமுக வேட்பாளர் பட்டியல் 2026

இந்த 169 தொகுதிகளின் பெயரையும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதியில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ,திருத்தணி ,திருவள்ளூர் ,மதுரவாயல் மாதவரம் ,திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளிலும் அதிமுக களமிறங்க உள்ளது. மேலும் சென்னை மாவட்டத்தை பொருத்தவரையில் ஆர் கே நகர் ,கொளத்தூர், வில்லிவாக்கம் ,திருவிக நகர், எழும்பூர் ,டி நகர் உள்ளிட்ட தொகுதிகளிலும் அதிமுக களமிறங்க உள்ளது.

முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடூ

இதற்கிடையே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக முதற்கட்ட வேட்பாளர்களை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த பட்டியலில் 23 பேர் இடம் பெற்றுள்ளன அவர்களின் 21 பேர் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 23 வேட்பாளர்களின் இரண்டு பேர் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட்டு மாற்று தொகுதிக்கு மாறியுள்ளன.

முன்னாள் அமைச்சர் தொகுதி மாற்றம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில் அல்லது 2020 மூன்றாம் ஆண்டு தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். எனவே அவர் இந்த முறை தன்னுடைய பழைய தொகுதியான சிவகாசி தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த முறை விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிவி சண்முகம் இந்த முறை மயிலம் தொகுதிக்கு மாறியுள்ளார்.

அதிமுகவின் முழு வேட்பாளர் பட்டியல்

இந்த நிலையில் அதிமுகவின் முழு வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 23 வேட்பாளர்களை முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் எஞ்சிருக்கும் 145 இடங்களில் களமிறங்க உள்ள வேட்பாளர்கள் பட்டியலை இன்று எடப்பாடி பழனிசாமி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. தேர்தலுக்காக பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பு தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.