தேனி,
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் நடந்த திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுகவில் நகராட்சி தலைவராகவும், 5 முறை எம்எல்ஏவாகவும் இருந்த என்னை கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டனர். நான் செய்த தவறு, எடப்பாடி பழனிசாமி அரசு தொடர ஆதரவு அளித்ததுதான். ஆரம்பத்தில் இருந்தே என்னை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்க நினைத்தவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக இனி எந்த காலத்திலும் ஜெயிக்காது. இந்த உலகில் நன்றி கெட்ட அரசியல்வாதி யார் என்றால் எடப்பாடி பழனிசாமிதான்.
இன்றைக்கு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். ஒரு காலத்தில் டெல்லியில் இருப்பவர்கள் கூட்டணி பேச தமிழகம் வருவார்கள். ஆனால் இன்றைக்கு அதிமுகவில் அவ்வாறு இல்லை. உதயசூரியன்தான் எந்த காலத்திலும் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
