சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சேலம் மேற்கு, தர்மபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி,சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருதாச்சலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில், கீழ்வேளூர், பெரம்பலூர், சேலம் வடக்கு, அம்பத்தூர் ஆகிய 18 தொகுதிகளில் பாமக போட்டியிட உள்ளது.
இந்நிலையில், 18 தொகுதிகளில் முதற்கட்டமாக 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக இன்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
1* கீழ்வேளூர் – வடிவேல் இராவணன்
2* அம்பத்தூர் – கே.என்.சேகர்
3* செஞ்சி – கணேஷ் குமார்
இதையடுத்து, எஞ்சிய 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் என்று பாமக தலைமை தெரிவித்துள்ளது.
