அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனோகர் தவெகவில் இணைந்தார்

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read
தொழில்நுட்பக் கோளாறு: சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு வழங்குவது பாதிப்பு
கோப்புப்படம்

தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரபலங்கள் கட்சி மாறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய்யின் தவெகவில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இணைந்து வருகின்றனர்.

Also Read
எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் – கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி
கோப்புப்படம்

இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனோகர் தவெகவில் இணைந்துள்ளார். சென்னையில் நேற்று தவெக தலைவர் விஜய்யை சந்தித்து, மனோகர் தன்னை தவெகவில் இணைத்து கொண்டார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் (தனி) சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link