அமெரிக்காவில் மருத்துவ மோசடியில் ஈடுபட்ட இந்திய டாக்டருக்கு ரூ.114 கோடி அபராதம்

வாஷிங்டன்,

இந்தியா வம்சாவளியை சேர்ந்த டாக்டரான ஜிதேஷ் படேல், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மருத்துவ நிறுவனம் ஒன்றை நிறுவி நடத்தி வந்தார். இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதன்பேரில் போலீசார் வாக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது நோயாளிகளுக்கு தேவையில்லாத மருத்துவப் பரிசோதனைகளைச் செய்தது, அவர்களுக்கு செய்யப்படாத அறுவை சிகிச்சைகளுக்கு காப்பீடு பணம் கோரியது மற்றும் சாதாரண சிகிச்சைகளை அதிக கட்டணம் கொண்ட சிகிச்சைகளாகக் காட்டியது உள்பட இவர் மீது சுமத்தப்பட்ட புகார்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து ஜார்ஜியா மாகாண கோர்ட்டு அவருக்கு ரூ.114 கோடி (14 மில்லியன் டாலர்கள்) அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த மோசடியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த மருத்துவ ஊழியர்களுக்கு ரூ.27 கோடி (3 மில்லியன்) வெகுமதியளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Source link