போர் நிறுத்தம் தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை நேற்றைய தினம் முன்னெடுத்தது அமெரிக்கா. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் இருக்கிறது. அதோடு அமெரிக்கா தன்னுடைய இறுதியான மற்றும் சிறந்த ஆஃபர்களை ஈரானுக்கு வைத்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ்.
யுரேனியத்தை செறிவூட்டும் குற்றச்சாட்டை முன்வைத்து ஈரானின் மீது அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து கூட்டுத் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் மேற்காசிய நாடுகள் முழுவதும் போர் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் விளைவாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டிருக்கிறார்.
அதோடு மேற்காசிய நாடுகளில் நிலைமை மோசமாகியது. அதோடு போரின் விளைவாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை போர் பதட்டம் அதிகரித்தது. ஈரானை ஒரேடியாக அழித்து விடுவோம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் பாகிஸ்தான் இடையில் மத்திய அரசிடம் செய்து பேச்சு வார்த்தைக்கு ஒரு நாடுகளையும் அழைத்தது.
அதன் பேரில் நேற்றைய தினம் நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது இந்த பேச்சுவார்த்தை முடிவில் எந்த ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்பது தெளிவாகிறது.
ஈரான் தரப்பு விளக்கம்:
பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறுவதற்கு அமெரிக்கா ஒரு சாக்குப்போக்கைத் தேடிக்கொண்டிருந்தது என்றும், முடிவெடுக்கும் அதிகாரம் இப்போது அமெரிக்காவிடமே உள்ளதாக சில தகவல்கள் வெளியாகின்றன.
ஜே.டி வான்ஸ் கூறியது என்ன?
பாகிஸ்தான் தலைநகர்இஸ்லாமாபாத்தில் கிட்டத்தட்ட 21 மணி நேரப் பேச்சுவார்த்தை நடந்தது. வாஷிங்டனின் நிபந்தனைகளுக்கு ஈரான் மறுப்பு கூறிவிட்டது. இதனைத்தொடர்ந்து அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் இஸ்லாமாபாத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மேலும் சிலர், ஒருசில விவகாரங்களில் மட்டும் தான் இரு நாடுகளுக்கும் பிரச்னையாக உள்ளதாகவும், பெரும்பான்மையானவை சுமூகமாக சென்றுகொண்டிருப்பதாகவும், ஒரே பேச்சு வார்த்தையில் தீர்வு எட்டப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஏன் முடிவு எட்டப்படவில்லை?
ஈரானின் சில நிபந்தனைகள் அமெரிக்கவிற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தாது என டிரம்ப் நினைப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக,
ஈரானின் அணுசக்தி உரிமையை பாதுகாத்தல்
- ஹோர்முஸ் நீரிணையின் மீது தங்களின் அதிகாரத்தி நிலை நாட்டுதல்
- வெளிநாடுகளில் முடக்கப்பட்டிருக்கும் ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும்.
- அமெரிக்கா போர் இழப்பீடு தர வேண்டும்.
பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் போனதற்கு இந்த நிபந்தனைகள் கூட காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
ஏற்கனவே இஸ்ரேலிய அதிகாரிகளுடன் நேரடிப் பேச்சு வார்த்தையில் ஈரான் ஈடுபடுவதற்கு எதிராக பெய்ரூட்டில் போராட்டக்காரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கிறபோதும் இஸ்ரேல் தெற்கு லெபனான் மீது தொடர்ந்து குண்டு வீசி வருகிறது. ஆனால் இந்தச் சூழலில் போர் நிறுத்தத்தை கடைபிடித்து அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்தி வருகிறது. இந்த முன்னுக்கு பின் முரணான சூழலால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாமல் மீண்டும் போர் நீடித்தால் ஏற்படும் மனித இழப்பு உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
