அமெரிக்கா- வெனிசுலா இடையே மீண்டும் தூதரக உறவு

கராகஸ்,

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நீண்ட காலமாக அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அந்நாட்டின் அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோ பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து, டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், வெனிசுலா மற்றும் அமெரிக்கா இடையே கடந்த 2019-ம் ஆண்டு முதல் துண்டிக்கப்பட்டிருந்த தூதரக உறவுகளை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வெனிசுலா தலைநகர் கரகாசில் உள்ள அதிபர் மாளிகையில், அமெரிக்க தூதர் லாரா டோகு மற்றும் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் எரிசக்தி (கச்சா எண்ணெய்) குறித்து ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக, வெனிசுலாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அங்கு அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யவும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source link