வாஷிங்டன்,
3 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றுள்ளார். அவர் இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ருபியோவை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது வர்த்தகம், இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். குறிப்பாக, அரிய வகை கனிமங்கள் தொடர்பா இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரியை அமெரிக்கா 18 சதவீதமாக குறைத்தது. அதேவேளை, குறிப்பிட்ட அமெரிக்க பொருட்கள் மீதான வரியை இந்தியா முழுமையாக ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, இதுகுறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
