மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்து 1994-இல் வெளியான படம் `அமைதிப்படை’. இப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சத்யராஜ், பல்வேறு சுவாரசி நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய் குறித்தும் சத்யராஜ் பேசினார். சத்யராஜ் தனது பேட்டியில் கூறியதாவது ;
ஒரு கட்டத்தில் கதாநாயகனாக எனக்கு இறங்கு முகம் ஏற்பட்டது. அதனால் கேரக்டர் ரோலுக்கு மாறினேன். வரிசையாக அனைத்து படங்களும் தோல்வி அடைந்து வந்தன. அந்த நேரத்தில் விஜய்யிடம் ஒரு பேட்டியை நாளிதழ் ஒன்று எடுத்தது. விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகிய நடிகர்கள் வளர்ந்து வந்த காலம் அது.. விஜய்யிடம் பேட்டி எடுக்கும் போது, உங்களுக்கு நடிப்பில் யார் இன்ஷ்பிரேஷன் என்று கேட்டனர். அதற்கு விஜய், எனக்கு யாரும் இன்ஷ்பிரேஷன் இல்லை என்று கூறினார். எந்த மாதிரி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கேட்டதற்கு அமைதிப்படையில் சத்யராஜ் நடித்தமாதிரி கேரக்டரில் நடிக்க ஆசை என்று சொன்னார். அப்போது நான் விஜய்க்கு போன் போட்டு நன்றி சொன்னேன். வளர்ந்து வரும் ஹீரோ நம்ம பெயரை குறிப்பிட்டு சொல்வது பெரிய விஷயம். ரொம்ப நன்றி என்று சொன்னேன்” என்றார்.
