தஞ்சாவூர்,
டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
விவசாயிகளுக்கான கோரிக்கைகள், எந்தவித பாகுபாடும் இல்லாமல் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும். பச்சை துண்டை போட்டுக்கொண்டு. விவசாயிகளுக்கு எதுவுமே நல்லது செய்யாத இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.
இதில் எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை. கரும்பு, நெல்லுக்கான ஆதார விலை அறிவிக்கவில்லை. நெல்லை நிலத்தில் முளைக்க வைப்பதற்கு பதிலாக, சாக்கு மூட்டையி லேயே முளைக்க வைத்த ஒரு மிகப்பெரிய சாதனையை செய்த தி.மு.க., அரசு செய்தது.
தெலுங்கானாவில், நான் கவர்னராக இருந்தபோது நீரா விற்பனைக்கு ஒப்புதல் அளித்தேன். புதுச்சேரியில் கள்ளுக்கடைகளும் உள்ளது. டாஸ் மாக்கை மூடாதவர்கள், கள்ளை பற்றி பேசுகிறார்கள். தமிழக அரசு ஒன்றில் ‘பாஸ் மார்க்’ வாங்கி இருக்கு என்றால் அது டாஸ்மாக்கில் மட்டும் தான். வேற எதிலும் அவங்க ‘பாஸ் மார்க்’ வாங்கவில்லை.
கூட்டத்தில் சிலர் என்னை அம்மா என்றார்கள். தமிழ்நாட்டுக்கு ஒரே அம்மாதான். அது ஜெயலலிதா அம்மா மட்டும் தான். என்னை அம்மா என்று அழைக்காதீர்கள். அக்கான்னு கூப்பிட்டால் போதும். ஜெயலலிதாவின் ஆசை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான். ஆகவே அவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவும், மக்களின் பிரச்சினைகளை தெரிந்து கொள்ளவும் தேர்தல் அறிக்கை குழுவாக வந்துள்ளோம்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையை கதாநாயகி என்கிறார். கனிமொழி. பா.ஜனதா தேர்தல் அறிக்கை அம்மா மாதிரி. ஏன் என்றால் ஒரு அம்மாவுக்குத்தான் குழந்தைகளுக்கு என்ன தேவை என தெரியும். எனவே நமது அறிக்கை ‘அன்னை அறிக்கை’ யாக இருக்கும். நல்ல தேர்தல் அறிக்கையை மக்களுக்கு சமர்ப்பிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
