"அரசியல் ஆட்டம் ஆரம்பம்".. 4கே தரத்தில் வெளியாகும் 'அமைதிப்படை' திரைப்படம்

சென்னை,

மணிவண்ணன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் கடந்த 1994 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் ‘அமைதிப்படை’. வெளியான நேரத்தில் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படத்தில் ரஞ்சிதா, கஸ்தூரி, ஆர். சுந்தராஜன், சுஜாதா, மலேசியா வாசுதேவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

சமீபகாலமாக ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ‘அமைதிப்படை’ திரைப்படமும் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இந்த படம் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்ட தரத்துடன், டால்பி ஒலி வசதியுடன் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் மார்ச் 30ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

அரசியல் நையாண்டி மையமாக கொண்ட இந்த படம், தேர்தல் சூழலில் மீண்டும் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link