இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சஞ்சய் குப்தா வெளியிட்டுள்ள விரிவான வழிகாட்டுதலின்படி, அனைத்து அரசு ஊழியர்களும் கண்ணியமான, சுத்தமான மற்றும் தொழில்முறை சார்ந்த ஃபார்மல் ஆடைகளை மென்மையான வண்ணங்களில் அணிய வேண்டும்.
அலுவலகத்தில் இருக்கும் போதோ அல்லது நீதிமன்றத்தில் ஆஜராகும் போதோ கேஷுவல் அல்லது பார்ட்டி உடைகளை அணியக் கூடாது. ஆண் ஊழியர்கள் காலர் வைத்த சட்டை மற்றும் பேன்ட் அணிய வேண்டும். ஷூ, செருப்பு போன்ற பொருத்தமான காலணிகளை அணிய வேண்டும். பெண் ஊழியர்கள் புடவை, ஃபார்மல் சூட்கள், சல்வார், சுரிதார் அல்லது துப்பட்டாவுடன் கூடிய குர்தா போன்ற ஃபார்மல் ஆடைகளும் ஷூ, செருப்பு போன்ற பொருத்தமான காலணிகளும் அணிய வேண்டும்.
அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிய அனுமதியில்லை. மேலும், அரசு கொள்கைகள் அல்லது திட்டங்கள் குறித்து தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்குகள் வாயிலாக கருத்து தெரிவிப்பதையும் ஏதேனும் பொது மேடை, வலைப்பதிவு அல்லது சமூக ஊடகத் தளங்களில் அரசியல் அல்லது மத ரீதியான கருத்து வெளியிடுவதையும் அரசு ஊழியர்கள் தவிர்க்க வேண்டும்.
இந்த அறிவுரை மற்றும் வழிகாட்டுதலை அரசு ஊழியர்கள் மீறினால் அது கடுமையானதாக கருதப்படும். அத்தகைய அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் எச்சரித்து உள்ளது.

