’அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமல்ல’ – சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி,

அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயமல்ல, அது ஒரு நெறிமுறை அல்லது அறிவுறுத்தல் மட்டுமே என சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியுள்ளது.

அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும் என்ற ஒன்றிய அரசின் வழிகாட்டுதலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்றம் இந்த சுற்றறிக்கை ஒரு “அறிவுறுத்தல்” மட்டுமே என்றும், அதில் பாடலை கட்டாயமாக்கவில்லை என்றும் தெரிவித்தது. மேலும், அதை பின்பற்றாதவர்களுக்கு எந்தவித தண்டனையும் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறியது.

Also Read
நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு – உயிரிழந்த பெண்ணின் தாய் தேர்தலில் போட்டி
’அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமல்ல’ - சுப்ரீம் கோர்ட்டு

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய விதிமுறைகளில், அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்றும், அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ‘வந்தே மாதரம்’ பாடல் 1875ஆம் ஆண்டு பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதியது.

Source link