அரசு பள்ளிகளில் 44 ஆயிரம் மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்க்கை

சென்னை,

தமிழக அரசு பள்ளிகளில் கடந்த 2025-26 கல்வியாண்டில் 3 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். இந்த கல்வியாண்டில் (2026-27) மாணவர் சேர்க்கையை 5 லட்சமாக உயர்த்த தொடக்க கல்வித் துறை சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, அரசு பள்ளிகளில் ஏப்ரல் மாதத்தில்தான் மாணவர் சேர்க்கை தொடங்கும். தற்போது, தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக அரசு பள்ளிகளிலும் மார்ச் மாதமே மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. அந்த வகையில், கடந்த 2-ந் தேதி தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

5 வயது பூர்த்தியான குழந்தைகள் பற்றிய விவரங்களை தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் அங்கன்வாடிகளில் சேகரித்து, வரும் கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேர்த்துள்ளனர். இதன்படி, அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த 20 நாட்களில் 44,396 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Source link