அர்ஜென்டினா செல்லும் இந்திய பெண்கள் ஆக்கி அணி

புதுடெல்லி,

இந்திய பெண்கள் ஆக்கி அணி, அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்தியா-அர்ஜென்டினா பெண்கள் அணிகள் இடையிலான ஆக்கி போட்டிகள் பியூனஸ் அயர்சில் முறையே வருகிற 13, 14, 16, 17 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டி செப்டம்பர் 19-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை ஜப்பானில் நடக்கிறது. இவ்விரு முக்கியமான போட்டிகளுக்கு தயாராக அர்ஜென்டினா தொடர் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link