அல்லு அர்ஜுனின் 23-வது படத்திற்கு இசையமைக்கும் அனிருத்; சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் வரை பல ஹிட் படங்களை கொடுத்து இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்திற்கு கமிட் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்திற்காக ரூ.25 கோடி அனிருத் சம்பளம் பேசியிருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இதுவே இந்திய இசையமைப்பாளர் ஒருவர் பெறும் அதிகபட்ச சம்பளமாக கருதப்படுகிறது.

அல்லு அர்ஜுனின் 23-வது படம் ரூ.800 கோடியில் உருவாகவுள்ளது. வருகிற ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தற்போது ஐதராபாத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பாடல் கம்போசிங்கில் அனிருத் ஈடுபட்டுள்ளாராம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் ஆக்‌ஷன் கதையாக உருவாகி வருகிறது.

Source link