அல்லு அர்ஜுனுடன் நடிகை திவ்ய பாரதி – ‘ஏஏ22’படத்தில் நடிக்கிறாரா?

சென்னை,

நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தனது 22-வது படமான ‘ஏஏ22’ படத்தின் படப்பிடிப்பில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்தில் நடிகை தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்து வருகிறார். மற்ற நடிகைகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், அல்லு அர்ஜுனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை திவ்ய பாரதி பகிர்ந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, திவ்யபாரதி ‘ஏஏ22’ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

அல்லு அர்ஜுனுடன் நடிகை திவ்ய பாரதி -  ‘ஏஏ22’படத்தில் நடிக்கிறாரா?
பிடித்த நடிகர்…‘பேச்சுலர்’ பட நடிகை சொன்னது யாரை தெரியுமா?

ஆனால், அந்த தகவல்கள் உண்மையல்ல என்றும், அவர் இப்படத்தில் நடிக்கவில்லை என்றும் தற்போது தெளிவாகியுள்ளது. அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் துபாயில் விடுமுறையை கழித்தார். அதே சமயம், நடிகை திவ்யபாரதியும் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக துபாயில் இருந்துள்ளார். அங்கு, தற்செயலாக அல்லு அர்ஜுனை சந்தித்த திவ்யபாரதி, அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். அதனைத்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Source link