அவிநாசி
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி நடைபெற உள்ளது. அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அவிநாசி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளான கருவலூர் மற்றும் தெக்கலூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களைச் சந்தித்து, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் மத்திய இணை-மந்திரி எல். முருகன் அவர்களை ஆதரித்து, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரியும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
இந்த நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
