அவிநாசி தொகுதி சட்டமன்ற வேட்பாளர் எல். முருகன் நாளை வேட்பு மனு தாக்கல்.

திருப்பூர்

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. த.வெ.க. உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய இணை-மந்திரியும் அவிநாசி சட்டமன்ற வேட்பாளருமான எல்.முருகன் நாளை, 6-4-2026 திங்கள் கிழமை அன்று அவிநாசி அப்பர் திருக்கோயில் அருகில் பெரிய தேர் திடலில் இருந்து, மத்திய நிலக்கரி துறை மந்திரி ஜி.கிசான் ரெட்டி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன், ஊர்வலமாகச் சென்று அவிநாசி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் மதியம் 12 மணிக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கின்றார்.

Source link