அவினாசி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டி

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் 30 ஆம் தேதி தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.

அதேபோல, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சியான பாஜகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் காட்டி வந்தது. வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, பாஜக இன்று 27 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

இதில், அவினாசி(தனி) தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவினாசி தொகுதியில் திமுக சார்பில் கோகிலா மணி போட்டியிடுகிறார். தவெக சார்பில் கமலி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டியிடுகிறார்.

அவினாசி தொகுதியை பொறுத்தவரை 1984 முதல் 2021 வரையிலான 9 தேர்தல்களில் அ.தி.மு.க. 8 முறை வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த தொகுதியை அ.தி.மு.க. எப்போதும் விட்டுக்கொடுத்ததில்லை. முதல் முறையாக இந்த தொகுதியை பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. விட்டுக்கொடுத்துள்ளது.

Source link