போபால்,
உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள சித்தார்த் நகரில் சுனில் (29) என்பவர் அங்கு உள்ள காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். மேலும் தன் முதலாளி வீட்டில் அவர் வாடகைக்கு இருந்து வந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் பிற்பகல் 2 மணியளவில் முதலாளியின் 8 வயது மகள் சிப்ஸ் வாங்க வெளியே சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், கடைக்கு சென்ற சிறுமி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவளது பெற்றோர் பதற்றம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும், அங்கு வேலை பார்த்து வந்த சுனில் பதறியடித்து கொண்டு வந்து. சிறுமியை கண்டுபிடித்துவிடலாம் கவலைப்படாதீர்கள் என்று கூறி, உடனடியாக அருகில் இருந்தவர்களை அழைத்து கொண்டு தேடும் பணியை தொடங்கினார். அந்த பகுதியில் உள்ள அனைத்து தெருவிலும் தேடினார், மேலும் போலீசாருக்கு தகவல் புகார் அளிக்கவும் உதவினார். இதனால் சிறுமி தேடுதல் தொடர்பாக அவர் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
இரண்டு நாட்கள் ஆகியும் சிறுமி கிடைக்கவில்லை. இந்நிலையில், சுனில் தங்கியிருந்த வாடகை அறையிலிருந்து ஒருவித துர்நாற்றம் வந்தது. கதவை உடைத்து உள்ளே சென்ற குடும்பத்தினர் கண்ட காட்சி நெஞ்சை உலுக்கியது. அங்கே ஒரு பெரிய மாவு கண்டெய்னர் இருந்தது அதில் சிறுமியின் உடல் சடலமாக கிடந்தது.
தகவல் கிடைத்த உடன் போலீசார் தனிப்படை அமைத்து சுனிலை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் குற்றாவளியை கைது செய்ய தகவல் கொடுப்பவருக்கு ரூ.25,000 வெகுமதியும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிரோசாபாத்திற்கு தப்பி செல்ல முயன்ற குற்றவாளி சுனிலை போலீசார் சுற்றி வளைத்த பிடிக்க முயன்றபோது, குற்றாவளி தன் துப்பாக்கி எடுத்து சூட தொடங்கினான். இதில் உதவி ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார். இந்த தாக்குதலுக்கு போலீசார் பதிலடி கொடுத்ததில், சுனில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக அதிகாரி கூறினார். உடனே காயமடைந்த குற்றாவளியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றநிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
