உலான்பத்தார்,
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண் ளுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற் றில்இந்திய வீராங்கனை மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்கில் மங்கோ லியாவின் நோமுண்டாரி என்க் அம்கலானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.
54 கிலோ எடைப்பிரிவில் இந் திய வீராங்கனை பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்கில் சீன தைபேயின் ஹூவாங் சியாயோ வென்னை சாய்த்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பிரியா 3-0 என்ற கோல் கணக்கில் வடகொரியாவின் வோன் அன் கியோங்கை தோற்கடித்து தங்கப்ப தக்கத்தை முத்தமிட்டார். 70 கிலோ எடைப்பிரி வில், இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி 4-1 என்ற கணக்கில் கஜகஸ்தானின் பக்கித் செய்டிசை பதம் பார்த்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.
