புதுடெல்லி,
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர் னிசிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இறுதி சுற்றில் இந்தியாவின் சம்ரத் ராணா-சுருச்சி சிங் இணை 479.6 புள் ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றது.
உஸ்பெகிஸ்தானின் நிஜினா சைட்குலோவா-முகமது கமலோவ் ஜோடி 481.3 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வென்றது. சீனதைபே யின் செங் யென் சிங்-ஹிக் சியாங் சென் கூட்டணி 412.2 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் பெற்றது.
