“ஆசிரியராக இருந்திருப்பேன்…” – கிரிக்கெட்டால் மாறிய வாழ்க்கை – பகிர்ந்த பிரியான்ஷ் ஆர்யா

சென்னை,

பஞ்சாப் அணியின் தொடக்க வீரரான பிரியான்ஷ் ஆர்யா, சென்னை அணிக்கு எதிராக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அறிமுகமான கடந்த சீசனில், முள்ளன்பூரில் சென்னைக்கு எதிராக சதம் அடித்து கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தார். இந்த நிலையில், சேப்பாக்கில் நேற்று நடைபெற்ற போட்டியிலும் ஆர்யா தனது திறமையை மீண்டும் நிரூபித்தார்.

Also Read
“கோலி மாதிரி ரன் சேஸ் செய்ய கற்றுக்கொள்” – ரகுவன்ஷிக்கு சேவாக் ஆலோசனை
“ஆசிரியராக இருந்திருப்பேன்…” - கிரிக்கெட்டால் மாறிய வாழ்க்கை  - பகிர்ந்த பிரியான்ஷ் ஆர்யா

210 ரன்கள் என்ற கடின இலக்கை பஞ்சாப் அணி எளிதாக துரத்தி, ஐபிஎல் 2026 தொடரில் தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

இந்தப் போட்டியில், ஆர்யா 11 பந்துகளில் 39 ரன்கள் (3 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்து 354.55 என்ற அபார ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி ‘பிளேயர் ஆப் தி மேட்ச்’ விருதை வென்றார்.

போட்டிக்குப் பிறகு பேசிய அவர், “என் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். என் சகோதரியும் ஆசிரியர் தான். கிரிக்கெட் இல்லையெனில் நானும் ஆசிரியராக இருந்திருப்பேன்,” என்றார்.

Source link