ஆட்ட நாயகன் விருதை பும்ராவுக்கு வழங்கியிருக்க வேண்டும்: சாம்சன்

மும்பை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் விளையாடின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு, ஆட்டமிழந்தார். அவர் 42 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் இங்கிலாந்து அணியில் பில் சால்ட் 5 ரன்கள் , ஹாரி புரூக் 7 ரன்கள் , பட்லர் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து ஜேக்கப் பெத்தேல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். நிலைத்து ஆடிய பெத்தேல் சதமடித்து அசத்தினார். கடைசி வரை போராடிய அவர் 105 ரன்களில் (ரன் அவுட் ) ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 253 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்ட்டது.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்த விருதை ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கியிருக்க வேண்டும். அவர் ஒரு தனித்துவமான பந்து வீச்சாளர்.அவரது அபாரமான பந்துவீச்சு இல்லாமல், நான் இந்த இடத்தில் நின்று இருக்க மாட்டேன். என தெரிவித்தார்.

Source link