தவெகவில் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சொத்து விவரம் தற்பொழுது வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தவெக வில்லிவாக்க தொகுதி வேட்பாளர்
தவெகவின் வில்லிவாக்க தொகுதி வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா சொத்துவிரம் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். வில்லிவாக்கம் தொகுதியில் வேட்பமான தாக்கல் செய்த ஆதம் அர்ச்சனா தனது பிரமாண பத்திரத்தில் சொத்து விபரங்களை சமர்ப்பித்தோனர். அதன்படி கலந்த 2024 25 ஆம் ஆண்டிற்கான அவரது வருமானம் ₹ 11.10 கோடி என்றும் 2020 -21 ம் ஆண்டு வருமானம் ரூ.5.89 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது மொத்த வருமானம் ரூ.67.57 கோடி அளவில் இருந்ததாகவும், அப்போது அவரது மனைவி டெய்சிக்கு ரூ.38 கோடி ரூபாய் வருமானம் இருந்ததாகவும் அதில் தெருவித்துள்ளார்.
மனைவி பெயரில் உள்ள அசையா சொத்துகளின் மதிப்பு
இதனைத் தொடர்ந்து தனக்கு சொந்தமான அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 180 கோடி என்றும் மனைவி பெயரில் உள்ள அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 162 கோடி என்றும் அவர் பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளார். மேலும் தனக்கு சொந்தமான அசையா சொத்தாக ரூ. 17.49 கோடி மற்றும் மனைவி பெயரில் ரூ. 89 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.கையிருப்பு ரொக்கமாக அவர் தன்னிடம் ரூ. 1.69 கோடியும் மனைவியிடம் ரூ. 12 லட்சம் இருப்பதாகவும் வங்கி கணக்குகளில் ரூ. 17.53 கோடி முதலீட்டுப் பங்குகளில் ரூ.2.23 கோடி மதிப்பிலுள்ள பங்குகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அதே நேரத்தில் ரூ. 155 கோடி வரை கடன் வழங்கியுள்ளதாகவும் மனைவி ரூ. 69.41 கோடி வரை கடன் வழங்கியதாகவும் கூறியுள்ளார்.
தங்கம், வைரம் மற்றும் கார்கள் விவரம்
மேலும் பிரமாணப்பத்திரிக்கையில் சென்னையில் உள்ள உத்தண்டி மற்றும் போர்ட் கிளப் பகுதியில் இரண்டு அபார்ட்மெண்ட்கள் ரூ. 17.49 கோடி மதிப்பில் உள்ளதாகவும், இரண்டு கார்கள் ரூ. 20.50 லட்சம் மதிப்பில் ஒரு ராயல் என்பீல்டு பைக் ரூ. 1.12 லட்சம் மதிப்பில் ஒரு சைக்கிள் ரூ. 63,000 மதிப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மனைவியின் பெயரில் மாமல்லபுரம்,செங்கல்பட்டு, கோவை மற்றும் கேரளாவில் 57 ஏக்கர் நிலம் ரூ. 37.45 கோடி மதிப்பில் உள்ளதாகவும் கோவை மற்றும் சென்னையில் 5 வணிக வளாகங்கள் ரூ. 33.27 கோடி மதிப்பில், வங்கி கடனாக ரூ. 26 கோடி இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரமாணப் பத்திரம் வெளியீடு
மேலும் தன்னிடம் ரூபாய் 2.29 கோடி மதிப்பிலான 1 கிலோ 691 கிராம் தங்கம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளார். மேலும் தன்னுடைய மனைவியிடம் ரூபாய் 3.01 கோடி மதிப்பிலான 2 கிலோ 225 கிராம் தங்கம், ரூபாய் 60.27 லட்சம் மதிப்பிலான 2 கிலோ 41 கிராம் வெள்ளி மற்றும் ரூபாய் 6.16 கோடி மதிப்பில் வைரம் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதே நேரம் வருமான வரி நிலுவையாக ரூ. 1.88 கோடி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
