ஆயுஷ் மாத்ரேவுக்கு தனது ஜெர்சியை பரிசாக வழங்கிய சச்சின்

மும்பை,

16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நடைபெற்றது. இதில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்தது.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 6-வது முறையாக யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், யு19 உலகக் கோப்பையை வென்றதற்காக சச்சினை சந்தித்து இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே வாழ்த்து பெற்றுள்ளார்.
அப்போது ஆயுஷ் மாத்ரேவுக்கு, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தான் கடைசியாக விளையாடிய தொடரில் பயன்படுத்திய ஜெர்சியை அன்புப் பரிசாக வழங்கினார். 

Source link