பெங்களூரு,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை விற்பதற்கான நடைமுறை கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. இதை அந்த அணியை நிர்வகிக்கும் இங்கிலாந்தை தலைமையிட மாக கொண்டு செயல்படும் மதுபான நிறுவனமான டியாஜியா உறுதிப்ப டுத்தியது.
இந்த நிலையில், பெங்களூரு அணியை ஏறக்குறைய ரூ.16,705 கோடிக்கு ஆதித்யா பிர்லா, டைம்ஸ் ஆப் இந்தியா, போல்ட், பி.எஸ்.பி.இ, பிளாக்ஸ்டோன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வாங்கியுள்ளன.
பெங்களூரு அணி விற்பனை செய்யப்ட்டதால் அந்த அணியின் பெயர் மாற்றப்படும் என தகவல் வெளியானது. இதனால் பெங்களுரு அணி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற அணியின் பெயர் மாற்றப்படாது என ஆதித்யா பிர்லா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
