பர்மிங்காம்,
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங் காமில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற் றையரில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென், ஹாங்காங்கின் என்ஜி கா லாங் அங்குசை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 21-19, 21-23, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். லக்ஷயா சென் காலிறுதியில் 6-ம் நிலை வீரரான சீனாவின் லி ஷி பெங்குடன் மோதுகிறார்.
