ஆஸ்திரேலியாவில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வார்னர் கைது

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். போட்டிகளுக்கு இடையே இடைவெளியில் அவர் சிட்னி சென்றார்.

சிட்னியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சிட்னியின் கிழக்குப்பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வார்னரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக மது அருந்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனாலும் அவர் மீண்டும் பாகிஸ்தான் செல்வதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது.

Source link