புதுடெல்லி,
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெறும்.
தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பி பிரிவில் அங்கம் வகிக்கும் ஆஸ்திரேலியா – ஜிம்பாப்வே அணிகள் மோதின. கொழும்புவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜிம்பாப்வே அணியில் பிளெஸ்ஸிங் முசரபானி 4 விக்கெட் , பபிராட் எவன்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினர்.இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.
இந்த வெற்றி தொடர்பாக பேசிய ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா கூறியதாவது,
நிச்சயமாக, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த வெற்றி நம்பமுடியாதது. இலங்கை ஆடுகளத்தை முன்பே தெரிந்து இருக்கிறோம் . 175 ரன்கள் போதும் என்று நினைத்தோம்.
நாங்கள் பந்துவீசிய விதம் சிறப்பாக இருந்தது. வீரர்கள் அனைவரும் நன்றாக விளையாடினர். இந்த வெற்றிக்கு அனைவரும் தகுதியானவர்கள். என தெரிவித்தார்.
