ஆ ராசா ஆடியோ சர்ச்சை.. ஸ்டாலின் இருக்கும் இடம் வேறு இடமாக மாறிவிடும்- எடப்பாடி பழனிசாமி பளீச்! – edappadi palaniswami criticize place where stalin stands will change to a. raja audio controversy

MGR மனைவி ஜானகி இறந்தபோது அவரை அடக்கம் செய்ய மொினாவில் இடம் கேட்டபோது திமுக அரசு அனுமதி மறுத்தது என எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

edappadi palanisamy(புகைப்படங்கள்Samayam Tamil)
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்களான கலசப்பாக்கம் தொகுதி எஸ்.எஸ்.அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆரணி சட்டமன்ற தொகுதி ஜெயசுதா லட்சுமி காந்தன், திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் சி ஏழுமலை, கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி வாக்கு சேகரித்தார்.

பின்னர் பேசிய அவர் ஸ்டாலின் அவர்கள் திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பேசும் போது கூறியுள்ளார்.கோபத்தை கக்குகிறார் எரிச்சலை வெளிப்படுத்துகிறார் என பேசியவர் எனக்கு உயிர் கொடுத்து ஆளாக்கிய தலைவர் கலைஞரை நான் வீட்டு சிறையில் வைத்திருந்தேன் எடப்பாடி பழனிச்சாமி நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிறார். உங்களுடைய கோபத்தை என்னிடம் காட்டாதீர்கள் உங்களுடைய துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசாவிடம் காட்டுங்கள் என்றும் அவர் கூறிய செய்தி தமிழ்நாடு மட்டும் இன்றி இந்திய அளவில் வைரலாகி வருவதாக குறிப்பிட்டார்.

அந்த ஆடியோவில் உள்ள செய்தியை தான் நான் பேசியதாகவும் என் மீது கோபப்பட்டு பிரயோஜனம் இல்லை என்றும் ஆ இ ராசா மீது கோபப்படுங்கள். அவர் உண்மையை கூறிவிடுவார். அதனால் பயத்தில் கோபத்தை எடப்பாடி பழனிச்சாமி மீது ஸ்டாலின் காட்டுவதாக குறிப்பிட்டார்.நீங்க கோபப்படும்போது தான் உங்கள் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் இதுபோன்று நடந்திருக்குமோ என பரவலாக பேசி வருகின்றனர்.ஸ்டாலின் உடல்நிலை சரியில்லாத போது அவரை வீட்டு சிறையில் வைத்திருந்தது தான் ராஜா அவர்களது ஆடியோவில் குறிப்பிட்டார்.தனது தந்தையே சிறையில் அடைப்பது நியாயமா என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?

உங்களை ஆளாக்கி இந்தியாவில் பாராட்டுகின்ற அளவிற்கு மந்திரியாகி தற்போது துணை முதல்வராகி செயல் தலைவராக ஆக்கிய ஆகிய உங்கள் தந்தையை நீங்கள் வீட்டு சிறையில் வைத்துள்ளதாக ஆ ராசா அவர்கள் கூறியுள்ளார்.ஆ ராசா மட்டும் கூறவில்லை மூத்த மகன் அழகிரியும் தனது தந்தையை சிறையில் வைத்துள்ளதாக குறிப்பிட்டு இருந்ததை சுட்டிக்காட்டினார். ஆ ராசா உண்மையை கூறினால் ஸ்டாலின் இருக்கும் இடம் வேறு இடமாக மாறிவிடும்.அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆ ராசா வெளியிட்டுள்ள இந்த ஆடியோ குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்
.2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் துரைமுருகன் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது காட்பாடி தொகுதியில் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்யும் போது இதுதான் கடைசித் தேர்தல் வயதாகிவிட்டது வாக்களியுங்கள் என கேட்டார் மக்களும் வாக்களித்து அவரை எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுத்தனர்.அதுவும் 700 வாக்கு வித்தியாசத்தில் தான் அவர் வெற்றி பெற்றார்.ஆனால் தற்பொழுது இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தியாவிலேயே அதிக தேர்தலில் வெற்றி பெற்ற பெருமை எனக்கு கிடைக்கும் எனக்கூறி வாக்கு கேட்கிறார். உங்களுக்கு பெருமை வேண்டும் என்பதற்காகவா தேர்தலில் நிற்பது என கேள்வி எழுப்பினார்.
அவருக்கு தற்போது 88 வயதாகிறது அவர் தேர்தலில் போட்டியிடுவது சொந்த விருப்பம் அதில் நான் தலையிட விரும்பவில்லை ஆனால் அவரால் நடக்கவே முடியவில்லை எழுந்திருக்க முடியாத அவர் எப்படி மக்களிடம் குறையை கேட்பார்.சட்டமன்ற உறுப்பினர் என்றால் சட்டமன்ற முழுவதும் சுற்றி மக்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும்.நடக்கும்போதே அவரைப் பிடித்துக் கொண்டு செல்கிறார்கள் நான் அவரை தவறாக கூறவில்லை எனவும் தெரிவித்தார்.அதனால மக்கள் அனைவரும் நம்முடைய காட்பாடியில் நிற்கிற வேட்பாளர் ராமிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென ஆரணியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.