இடைக்கால பட்ஜெட்டில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு…? – முழு விவரம்

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம் வருமாறு:-

* அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் – ரூ.1,55,977 கோடி

* மகளிர் விடியல் பயண திட்டம் – ரூ.4,000 கோடி

* அரசு பேருந்து டீசல் மானியத்துக்கு நிதி – ரூ.1,857 கோடி

* மாணவர்களுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் – ரூ.1,782 கோடி

* உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் – ரூ.17,088 கோடி

* கூட்டு குடிநீர் திட்ட மேம்பாடு – ரூ.809 கோடி

* நதிக்கரை மேம்பாடு – ரூ.374 கோடி

* அனைத்து சமூக நலத்திட்டங்களுக்கான நிதி – ரூ.5,473 கோடி

* முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிகள் நடத்த நிதி – ரூ.47 கோடி

* முதல்-அமைச்சரின் இளைஞர் விளையாட்டு திருவிழா – ரூ.43 கோடி

* முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் – ரூ.8,911 கோடி

* முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசுத்தொகை – ரூ.101 கோடி

* செமி கண்டக்டர் இயக்க திட்டம் – ரூ.500 கோடி

* கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – ரூ.6,000 கோடி

* காலை உணவுத் திட்டம் – ரூ.1,884 கோடி

* தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் – ரூ.214 கோடி

* விலையில்லா வேட்டி – சேலை திட்டம் – ரூ.612 கோடி

* பாம்பனில் தூண்டில் வளைவு – ரூ.58 கோடி

* அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் – ரூ.11,000 கோடி

* தீயணைப்பு வீரர்கள் பயிற்சி மையம் – ரூ.22 கோடி

* வறட்சி தடுப்பு நடவடிக்கைக்கு நிதி – ரூ.110 கோடி

* மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் அமைக்க நிதி – ரூ.50 கோடி

Source link