இணையத்தில் வெளியான ஜனநாயகன் – அனுதாப அலைகளை பெறுகிறாரா விஜய்? – after jananayagan piracy sympathy wave for vijay reported

தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். சென்சார் பிரச்சனையால் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டு இருந்த இந்த படம் திடீரென நேற்று முன்தினம் வலைதளங்களில் சட்டவிரோதமாக வெளியாகிறது.

சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்திற்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கடுமையான எதிர்வினை ஆற்றி இருந்தனர். இந்த சூழலில்தான் ஜனநாயகன் படத்தை இணையத்தில் வெளியிட்டது யார் என்பது குறித்து சைபர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளியாகும் கலவையான விமர்சனங்கள்!

ஏற்கனவே இந்த ஜனநாயகம் படம் வெளியீடு தாமதத்திற்கு அரசியல் காரணங்களே காரணம் என கட்சியின் தலைவர் விஜய் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் பொதுவெளியில் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இதற்கிடையில் இந்த படம் சமூக வலைதளங்களில் வெளியானது. தேர்தலை ஒட்டி அரசியல் திட்டமிட்டு செய்யப்பட்டது என ஒரு தரப்பும் விஜய் தரப்பினருக்கு தெரியாமல் படம் வெளியாகி இருக்க வாய்ப்பில்லை என மற்றொரு தரப்பும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

மேலும் சிலர் சுயலாபத்திற்காக இந்த படத்தை telegram செயலில் யாரோ வெளியிட்டிருக்க கூடும் எனவும் ஒரு பார்வை நிலவுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் இந்த செயலில் ஈடுபட்டது யார் என்பது குறித்து தமிழ்நாடு சைபர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வெளியான படத்தின் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என படக் குழு அறிவித்திருக்கிறது. மேலும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையினர் சார்பில் ஜனநாயகன் படத்தின் காட்சிகளை பகிர்ந்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக டிஜிபிக்கு புகார் கடிதம் அனுப்பி இருக்கின்றனர்.

விஜய்க்கு அனுதாப அலை எழுமா?

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இந்த படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை கிளப்பியது. கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக தள்ளிப்போனது. அதனை தொடர்ந்து படக்குழுவினர் உச்சநீதிமன்றத்தை நாடினர். ஆனால் உச்சநீதிமன்றம் மறு தணிக்கைக்கு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து ஜனநாயகன் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த சூழலில் தான் திடீரென நேற்று முன்தினம் வலைதளங்களில் சட்டவிரோதமாக திரைப்படம் வெளியாகி இருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த படம் இணையதளங்களில் வெளியாகியிருப்பதால் விஜயின் தொண்டர்கள் கொதிப்படைந்திருக்கின்றனர்.

பல கோடி பொருட்செலவில் தயாரித்த படத்தை வலைதளத்தில் வெளியிட்டதால் தயாரிப்பாளர்கள் உட்பட படக் குழுவினர் மொத்த பேரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். தியேட்டர் உரிமையாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் கடுமையான வருமான இழப்பை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால் விஜய்க்கு அரசியல் ரீதியான அனுதாப அலை அதிகரித்திருக்கிறது. ஏற்கனவே தன்னைத்திட்டமிட்டு அரசியல் கட்சிகள் முடக்குவதாக பேசி வரும் விஜய்க்கு மக்களின் ஆதரவு மேலும் பெருகத் தொடங்கி இருக்கிறது. இதனால் தேர்தல் வெற்றிக்கு இந்த படத்தின் விவகாரம் உறுதுணையாக இருக்கும் எனவும் சிலர் விமர்சிக்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் இணையதளங்களில் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் சிலர் இந்த படத்தை வெளியிட்டவர்கள் குறித்து அவதூறு கருத்துகளையும் பேசி வருகின்றனர்.

Source link