இண்டியன்வெல்ஸ் ஓபன்: அல்கராசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் மெத்வதேவ்

வாஷிங்டன்,

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கே றிய அரைஇறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரரும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 11-ம் நிலை வீரர் டேனில் மெத்வதேவுடன் (ரஷியா) மோதினார்.

பதற்றமின்றி ஆக்ரோஷமாக ஆடிய மெத்வதேவ் 6-3, 7-6 (7-3) என்ற நேர் செட்டில் அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 1 மணி 37 நிமிடங்களில் அல்காரசின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்தார். 22 வயதான அல்காரஸ் இந்த ஆண்டில் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். இந்த சீசனில் தொடர்ச்சியாக 16 ஆட்டங்களில் வென்று இருந்தார்.

போட்டிக்கு பிறகு அல்காரஸ் கூறுகையில், ‘மெத்வதேவ் வியப்பூட்டும் வகையில் விளையாடினார். தொடக்கம் முதல் கடைசி வரை நம்ப முடியாத அளவுக்கு அவரது ஆட்டம் அமைந்தது. அவர் இதுபோன்று விளையாடியதை பார்த்ததில்லை. எல்லா பாராட்டும் அவரையே சாரும். வெற்றிக்கு அவர் முற்றிலும் தகுதியானவர்’ என்றார்.

Source link