இண்டியன்வெல்ஸ்,
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பல்கேரிய வீரர் டிமிட்ரோவ் டெரன்ஸ் அட்மேனை (பிரான்ஸ்) எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் டிமிட்ரோவ் டெரன்ஸ்,அட்மேனை
தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றை யர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் 6-1, 4-6, 1-6 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் கேத்ரினா சினியகோவாவிடம் தோற்று வெளியேறினார்.
