’இதற்காக நீண்ட காலம் காத்திருந்தோம்’ – ஹர்திக் பாண்ட்யா

மும்பை,

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 4 விக்கெட்டுகள் இழந்து, 224 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணியை மும்பை அணி வீழ்த்தியது. இதன் மூலம் 2012-க்கு பின் தொடக்க ஆட்டத்தில் வெல்லாத அணி என்ற சாபத்தை உடைத்து சாதனை படைத்தது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 221 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி ஓவர்களில் விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது.

போட்டிக்குப் பிறகு பேசிய ஹர்திக் பாண்ட்யா, “தொடக்கப் போட்டியில் வெற்றி பெற நீண்ட காலமாக காத்திருந்தோம். ஒவ்வொரு முறையும் சீசனை சிறப்பாக தொடங்கவே நாங்கள் விரும்பினோம். அதை இப்போது சாதித்ததில் முழு அணியும் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது.

’எங்கள் பந்து வீச்சாளர்கள் அருமையாக வீசினர். கொல்கத்தா அணியை 240-250 ரன்களுக்கு செல்ல விடவில்லை. அப்படி சென்றிருந்தால் கடினமாக இருந்திருக்கும். ஆனால் 220 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கே. ரோகித் மற்றும் ரிக்கெல்டன் இருவரும் அபாரமாக விளையாடினர். குறிப்பாக ரோகித் அடித்த சில ஷாட்கள் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தது” என்று கூறினார்.

Source link