சென்னை,
தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தில் சுமார் 3 லட்சம் பொறுப்பாளர்கள் பல்வேறு கட்டங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், முதற்கட்டமாக 1 லட்சத்து 2 ஆயிரத்து 103 நிர்வாகிகளுக்கு கியூஆர் குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது.
2-ம் கட்டமாக கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் தேதி 106 கழக மாவட்டங்களுக்குட்பட்ட 214 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஆயிரத்து 1921 நகர/ஒன்றிய/பேரூர் கழகங்கள் மற்றும் அதை சார்ந்த 21 ஆயிரத்து 150 கிளை மற்றும் வார்டு கழகங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள் 1,00,231 பேருக்கு கியூஆர் குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டை அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது 3-ம் கட்டமாக 1,00,063 (ஒரு லட்சத்து அறுபத்து மூன்று) கழக நிர்வாகிகளுக்கு கியூஆர் குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் இன்று வழங்கினார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் மொத்தமாக இதுவரைக்கும் 3,02,397 பேருக்கு கியூஆர் குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
