19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் , நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு வீரர் சுழற்பந்துவீச்சாளர் குருனல் பாண்டியா 2 பவுன்சர்களை வீசினார்.
இதனால் 2025 முதல் ஐபிஎல் தொடரில் குருனல் பாண்டியா அதிக பவுன்சர் பந்துகளை (32) வீசி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா வீசிய பவுன்சர் பந்துகளின் எண்ணிக்கையை சமன் செய்துள்ளார்.
சுழற்பந்துவீச்சாளர் பவுன்சர் பந்துகளை வீசுவது அரிதாக காணப்படும் ஒன்று ஆனால் குருனல் பாண்டியா அதிக பவுன்சர் பந்துகளை வீசியுள்ளது ஆச்சரியத்தை ஏறப்டுத்தியுள்ளது.
