இந்தியன் வெல்ஸ் டென்னிஸ்: சின்னர் , சபலென்கா முதல்முறையாக பட்டம் வென்று சாதனை

கலிபோர்னியா,

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் முதல்முறையாக யானிக் சின்னர், அரினா சபலென்கா பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார்கள்.

ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் டேனியல் மெத்வதேவ் – யானின் சின்னர் மோதினார்கள். இந்தப் போட்டியில் 7-6 (6), 7-6 (4) என்ற செட்களில் சின்னர் போராடி வென்றார். இதுவரை 10 முறை இருவரும்மோத, 9ஆவது முறையாக சின்னர் வென்று ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார்.

Also Read
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் – சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ்:  சின்னர் , சபலென்கா முதல்முறையாக பட்டம் வென்று சாதனை

மகளிர் ஒற்றையர் பிரிசில் அரினா சபலென்கா 3-6, 6-3, 7-6 (6) என்ற செட்களில் எலேனா ரைபாகினாவை வென்றார். இது சபலென்காவின் முதல் இண்டியன் வெல்ஸ் பட்டம் ஆகும்.

2023, 2025ஆம் ஆண்டில் இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற சபலென்கா இந்தமுறை பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

Source link