புதுடெல்லி,
இந்தியா தற்போது 195 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்ட் கியூபிக் மீட்டர் (mmscmd) எரிவாயுவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. அவற்றில் சுமார் 60 மில்லியன் எம்எம்எஸ்சிஎஸ்டி அளவிலான எரிவாயுவை கத்தார் நாட்டிலிருந்து இந்தியா வாங்குகிறது.
இந்த நிலையில், மேற்கு ஆசியாவில் மோதல் அதிகரித்து வரும் சூழலில் எரிசக்தி ஆதாரங்களுக்காக பிற நாடுகளை இந்தியா ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) திரவாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) தட்டுப்பாடு இல்லை.
போதுமான அளவு எல்.பி.ஜி இருப்பில் உள்ளது. தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படுகிறது. 25 நாட்களுக்கான மூலப்பொருட்கள் என 50 நாட்களுக்கு இருப்பு உள்ளது. சரிசக்தியின் இருப்பு குறித்து தினமும் 2 முறை ஆய்வு செய்யப்படுகிறது. வளைகுடா நாடுகள் தவிர பிற நாடுகள் தவிர பிற நாடுகளிடமும் கச்சா எண்ணெய் வாங்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
கத்தார் நாட்டுக்கு மாற்றாக மற்ற நாடுகளில் இருந்து எரிவாயு வாங்க இந்தியா முயன்று வருகிறது. இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் எரிவாயு விற்பனை செய்ய முன்வந்துள்ளன.சர்வதேச எரிசக்தி முகமை, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்புடன் இந்தியா தொடர்பில் உள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
