இந்தியாவில் காமன்வெல்த் போட்டி: இடத்தை ஆய்வு செய்த 3 பேர் கொண்ட குழு

ஆமதாபாத்,

72 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்த இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் போட்டி போட்டன. இந்த நிலையில், காமன்வெல்த் போட்டியை நடத்த இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆமதாபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் என்று காமன்வெல்த் கூட்டமைப்பு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2030-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடக்கிறது. போட்டிக்கு இன்னும் 4 ஆண்டுகள் இருக்கும் நிலையில் காமன்வெல்த் ஸ்போர்ட்ஸ் அமைப்பின் தலைவர் டொனால்டு ருகாரே தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் போட்டி நடைபெற இருக்கும் இடங்களை நேரில் ஆய்வு செய்தனர். பின் னர் டொனால்டு ருகாரே கூறுகையில், ‘பிரமாண்டமான போட்டிக்கு ஆமதாபாத் தயாராக இருக்கிறது’ என்று தெரிவித்தார். அத்துடன் அந்த குழுவினர் டெல்லியில் நேற்று மத்திய விளையாட்டு துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Source link