இந்தியாவுடன் நாக் அவுட்டில் மோதும் வாய்ப்பு எற்பட்டால் பாகிஸ்தான் விளையாடுமா ? வெளியான தகவல்

புதுடெல்லி,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 20 அணி கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த அணிகள் ‘சூப்பர்’ சுற்றுக்கு முன்னேறின. ‘சூப்பர்’ சுற்றுக்கு வந்துள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த போட்டி தொடரில் தற்போது ‘சூப்பர்8’ சுற்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாக் அவுட் சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் மோதும் வாய்ப்பு ஏற்பட்டால் பாகிஸ்தான் அரசு முடிவையே கிரிக்கெட் வாரியம் பின்பற்றும் என கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- அரசின் அறிவுறுத்தல்களையே வாரியம் பின்பற்றும். ஒருவேளை தொடரின் நாக்-அவுட் சுற்றில் மீண்டும் இந்தியாவுடன் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், அப்போதும் அரசின் முடிவே இறுதியானது என வாரியத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

முன்னதாக லீக் சுற்றில்இந்தியாவுடன் விளையாட மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான் அணி இறுதி நேரத்தில் தான் விளையாட ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Source link