இந்தியா – இங்கிலாந்து போட்டியை நேரில் கண்டுகளிக்கும் தோனி, ரோகித் சர்மா

மும்பை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்துள்ளது.இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில் , இந்த போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான தோனி , ரோகித் சர்மா நேரில் கண்டுகளித்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source link