இந்திய அணிக்கு அதிர்ச்சி….பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலிருந்தும் அபிஷேக் சர்மா விலகல்

டெல்லி,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா தனது 2-வது லீக்கில் ஆப்பிரிக்க அணியான நமிபியாவை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று சந்திக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் ஜெராக்ட் எராஸ்மாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா உடல்நலக்குறைவு காரணமாக விளையாடவில்லை. அதற்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடுகிறார்.

இந்த நிலையில், அபிஷேக் சர்மா உடல்நிலை இன்னும் சரி ஆகவில்லை எனவும் அவர் அடுத்த 2 போட்டிகளில் விளையாடமாட்டார் என இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Source link