இந்திய அணி வெற்றி பெற.. மூஞ்சுறுவின் காதில் வேண்டுதல் வைத்த அபிஷேக் சர்மா

மும்பை,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிகட்ட ஆட்டங்கள் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) அரங்கேறும் 2-வது அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. ஏறக்குறைய சரிசம பலத்துடன் இரு அணிகளும் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். யார் வெற்றி பெற்றாலும் 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைவார்கள். ஆனால் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இந்திய அணி வீரர்கள் விளையாடுவதால் இந்திய அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பர்ப்பை ஏற்படுத்திய நிலையில், இந்திய அணியினர் நேற்று மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்திவிநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது இளம் வீரர் அபிஷேக் சர்மா, விநாயகரின் வாகனமான மூஞ்சுறுவின் காதில் வேண்டுதலை வைத்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்திய அணி வெற்றி பெற வேண்டும் அபிஷேக் சர்மா வேண்டுதல் வைத்ததாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Source link